184 fishermen released from Pakistan jail visit Gujarat | பாக்., சிறையில் விடுவிக்கப்பட்ட 184 மீனவர்கள் குஜராத் வருகை

ஆமதாபாத்பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 184 பேர், குஜராத்திற்கு நேற்று வந்தடைந்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன், குஜராத்தை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில், நம் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கடலோர காவல் படையால், அவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அவர்களை விடுவிக்க மத்திய அரசு துாதரக ரீதியில் நடவடிக்கைகளை எடுத்தது. இதையடுத்து, பாகிஸ்தான் சிறையில் உள்ள 198 இந்திய மீனவர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களில் 184 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று பேர் ஆந்திராவையும், நான்கு பேர் டையூவையும், ஐந்து பேர் மகாராஷ்டிராவையும், இருவர் உத்தரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள்.

இவர்கள் அனைவரும் பஞ்சாபின் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். பின், அவர்கள் அங்கிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த 184 மீனவர்கள் நேற்று வதோதரா வந்தடைந்தனர்.

ரயிலில் வந்த அவர்களைமாநில மீன்வளத் துறை அமைச்சர் ராகவ்ஜி படேல் வரவேற்றார். இதன்பின், அவர்கள் அங்கிருந்து சிறப்பு பஸ்கள் வாயிலாக தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.