காசாசிட்டி: பாலஸ்தீனத்தின் காசா தீவிரவாத அமைப்பு மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வந்த தீவிர சண்டைக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய நாடுக ளான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது.
பாலஸ்தீனத்தை இரு பிரிவுகளாக பிரித்து, காசா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்குகரை பகுதியை நாட்டின் அதிபர் முகமது அப்பாசும் ஆட்சி செய்து வருகின்றனர். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.
அதேபோல் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு வரும் ‘இஸ்லாமிக் ஜிகாத்’ உள்ளிட்ட ஆயுத குழுக்களை பயங்கரவாத அமைப்புகளாக இஸ்ரேல் கருதுகிறது. இந்த ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதும், இஸ்ரேல் பதிலடி கொடுப்பதும் அடிக்கடி நிகழ்கிறது.
இதற்கிடையே பாலஸ்தீனத்தின் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின்தலைவர் காதர் அதானென், 45, சமீபத்தில் இஸ்ரேல்சிறையில் உயிரிழந்தார்.
காரணம் இன்றி தன்னை இஸ்ரேல் படையினர் கைது செய்ததாக குற்றம்சாட்டி, கடந்த 86 நாட்களாகஉண்ணாவிரதம் இருந்த காதர் இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இருவர்கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக காசாவில் செயல்படும் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழு மீது, இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 33 பேர் உயிரி ழந் தனர். மேலும், 90 பேர் படுகாயமடைந்தனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் காசா முனையில் உள்ள இஸ்லாமிக் ஜிகாத்தின் ராக்கெட் தாக்குதல் பிரிவு தளபதி உட்பட மூத்த தளபதிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த ஐந்து நாட் களாக நடந்து வந்த கடும் சண்டைக்குப் பின், பாலஸ்தீன ஆயுத குழுக்கள் மற்றும் இஸ்ரேல் இடையே நேற்று போர் நிறுத்தம்அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement