Ending military rule in Thailand | தாய்லாந்தில் முடிவுக்கு வரும் ராணுவ ஆட்சி

பாங்காக், தாய்லாந்தில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. இதன் வாயிலாக, ஒன்பது ஆண்டுகளாக நடந்து வந்த ராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி கடந்த 2014ல் ராணுவத்தால் கலைக்கப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் ராணுவ தளபதி பிரயுத் சான் ஈ சா அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்தார். இவரது தலைமையிலான ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், மன்னர் முறைக்கு எதிராகவும் அந்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த 14ல், தாய்லாந்தில் பொதுத் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.

அதன்படி, 500 உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் சபையில், எதிர்க்கட்சிகளான மூவ் பார்வர்டு கட்சியும், பியூ தாய் கட்சியும், 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

மேலும், சில கட்சிகளின் ஆதரவுடன் மூவ் பார்வர்டு கட்சி ஆட்சி அமைக்கும் என்றும், அக்கட்சித் தலைவரும், பிரபல தொழிலதிபருமான பிடா லிம்ஜாரோன்ராட், 42, பிரதமராக பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது.

தாய்லாந்தில், ஒன்பது ஆண்டுகளுக்கு பின் ராணுவ ஆட்சி இல்லாத ஜனநாயக முறையிலான ஆட்சி தாய்லாந்தில் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.