Farhana: ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு: அமீர் பரபரப்பு அறிக்கை.!

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் கடந்த வாரம் ‘பர்ஹானா’ என்ற படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப்படம் குறித்து இயக்குனரும், நடிகருமான அமீர் வெளியிட்டுள்ள அறிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ் சினிமாவில் ஒரு நாள் ஒரு கூத்து, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நெல்சன் வெங்கடேஷன். இவர் தற்போது இயக்கியுள்ள படம் ‘பர்ஹானா’. இந்தப்படம் முஸ்லீம் சமுதாய மக்களை இழிவுப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக சில வதந்திகள் பரப்பபட்டது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். இதனையடுத்து கடந்த வாரம் வெளியாகியுள்ள ‘பர்ஹானா’ படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனிடையில் ‘பர்ஹானா’ படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், இய்க்குனர் நெல்சன் வெங்கடேஷன் மற்றும் தயாரிப்பு அலுவலகம் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பர்ஹானா’ படம் குறித்து ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களும் அந்தப்படத்தை எதிர்ப்பது போல் ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.

மேலும், இஸ்லாமிய மக்களால் ஐஸ்வர்யா ராஜேஷ் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ? என்ற நோக்கில் அவரது இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கு செய்தி உண்மையிலே எனக்கு வருத்தம் தருவதாக இருக்கிறது. இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தி மத வேற்றுமையை உருவாக்கும் ஒரே நோக்கத்தில் தயாரிக்கப்பட ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தையும் ‘பர்ஹானா’ படத்தையும் ஒரே கோணத்தில் பார்க்கும் அளவிற்கு தமிழர்களும் இஸ்லாமியர்களும் அறிவில் குறைந்தவர்கள் இல்லை.

Abhirami: பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் நடிகை அபிராமி: குவியும் வாழ்த்துக்கள்.!

மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும் என்பதாலும், அவருக்கு இஸ்லாமியர்கள் மீது அன்பும், மரியாதையும் இருப்பதை நான் உணர்ந்திருப்பதாலும் இஸ்லாமிய கோட்பாடுகளை இழிவுபடுத்தும் உள் நோக்கோடு இப்படத்தில் நடித்திருப்பார் என்பதையும், தீய நோக்கத்தோடு இப்படத்தை தயாரிப்பு நிறுவனம் எடுத்திருக்கும் என்பதையும் நான் நம்பவில்லை.

எனவே, இஸ்லாமிய கதாபாத்திரங்கள் உள்ள எல்லா படத்துக்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி, இஸ்லாமிய சமூகத்தை ஒரு சகிப்பின்ன்மை கொண்ட சமூகமாக சித்தரிக்க வேண்டாம் என இந்த அறிக்கையின் மூலம் கேட்டு கொள்கிறேன். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் காவல்துறையின் பாதுகாப்பை வாபஸ் பெற்று கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அன்போடு கேட்டு கொள்கிறேன்.

STR 48: சிம்புவுடன் ஜோடி சேர போகும் தீபிகா படுகோனே.?: பரபரக்கும் கோலிவுட்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.