வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிர்களின், களைக் கொல்லி மருந்தை தாங்கும் திறன் குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து தவறான தகவல்களை தருவதாக, அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது.
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பயன்படுத்துவதற்கு, ‘ஜி.எம்., பிரீ இந்தியா’ என்ற அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது
இவர்களுடைய வாதம்.
இந்த கூட்டமைப்பின் சார்பில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:’களைக்கொல்லி மருந்துகளை தாங்கக் கூடிய பயிர்களுக்கு தடை விதிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
ஆனால், இதற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரானது, களைக்கொல்லி மருந்தை தாங்கக் கூடிய பயிர் அல்ல என்று மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவல் தொடர்ந்து தெரிவிக்கப்படுகிறது.மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரிடும் விவசாயிகள், களைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தினால், அவர்கள் குற்றவாளியாக பார்க்கப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement