சென்னை: கஸ்டடி படத்தில் நடிக்க கீர்த்தி ஷெட்டி வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியான திரைப்படம் கஸ்டடி.
இப்படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜவும் இணைந்து இசையமைத்து இருந்தனர்
இயக்குநர் வெங்கட்பிரபு : சென்னை 28 படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த வெங்கட் பிரபு, சரோஜா, மங்காத்தா போன்ற வெற்றிப் படங்களை இயக்கினார். இதையடுத்து கடந்த ஆண்டு சிம்புவை வைத்து மாநாடு என்ற வெற்றிப்படத்தை இயக்கினார். டைம் லுப் முறையில் வெளியானத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சிம்புவிற்கு ஒரு கம்பேக் படமாக அமைந்தது.
தெலுங்கில் என்ட்ரி : மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் வெங்கட் பிரபு கஸ்டடி என்ற படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் எடுத்திருந்திருந்தார். இப்படத்தின் மூலம் இயக்குனர் வெங்கட் பிரபு தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும், வில்லனாக அரவிந்த் சாமியும் நடித்திருந்தனர்.

கலவையான விமர்சனம் : கடந்த மே 12-ந் தேதி வெளியான இப்படம் வெளியான முதல் நாளே கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் சரிவை சந்தித்தது. அதன்படி கஸ்டடி படம் ரிலீசான முதல் நாளில் தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளையும் சேர்த்து ரூ.3.2 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ள நாகசைத்தன்யா, இப்படத்தில் கான்ஸ்டபிள் சிவா என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

சம்பளம் எவ்வளவு தெரியுமா : இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்த கீர்த்தி ஷெட்டி வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், அப்படத்தில் நடிக்க அவர் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான கீர்த்தி ஷெட்டி, முதல் படத்திலேயே தமிழ்,தெலுங்கு என இருமொழிகளிலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து, சூர்யாவின் வணங்கான் படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமான நிலையில்,பின் அப்படத்தில் இருந்து விலகினார்.