லண்டன்: பிரிட்டன் தலைநர் லண்டனில் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது மகன் இளஞ்செழியனுடன் சேர்ந்து மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். இது அவரது 141வது மாரத்தான்.
தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களுக்கு உடல்நலம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் செய்து வருகிறார்.
அந்த வகையில், தானே முன் உதாரணமாக இருக்கும் விதமாக பலமுறை மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதுவரை 140 முறை மாரத்தான் ஓட்டப்பந்தயம் மேற்கொண்ட அவர் தற்போது பிரிட்டன் தலைநகர் லண்டனில் தனது மூத்த மகனும் டாக்டருமான இளஞ்செழியனுடன் சேர்ந்து மாரத்தான் ஓட்டப்பந்தயம் மேற்கொண்டார்.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடியோ வெளியிட்டு கூறியுள்ளதாவது: கடந்த ஒரு வார காலம் லண்டனில் உள்ள என் மகன் குடும்பத்துடன் என் துணைவியாருடன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தேன். ‘இளைஞர் தம் உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வை’ ஏற்படுத்தும் முயற்சியாக நமது 141வது 21.1 கிமீ தூரத்திற்கான THE LEXICON BRACKNELL HALF MARATHON – 2023ல் என் மகன் டாக்டர் இளஞ்செழியனுடன் ஓடி நிறைவு செய்தது கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement