ஊடகவியலாளரும், ஸ்டிங் வீடியோக்களில் பெயர்போனவருமான மதன் ரவிச்சந்திரன் அண்மையில் சில முக்கிய யூடியூபர்களின் ரகசிய வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். ‘மார்ஸ் தமிழ்நாடு’ சேனலில் வெளியான அந்த வீடியோவில் யூடியூப் நெறியாளர் மாதேஷ், ஐயப்பன் ராமசாமி, முக்தார் உள்ளிட்டோர் ஸ்டார் ஹோட்டலில் சரக்கு அடிப்பது, சுயநலத்துக்காக அரசியல் கட்சிகளை டம்மி செய்ய பேட்டி காண்பது, அதற்காக பேரம் பேசுவது அனைத்தும் பதிவாகி இருந்தது.
இதில் சிக்கிய ஒரு சிலர் மீடியாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகின்றனர். மற்றவர் சில கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் யூடியூபில் பேட்டி எடுத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், மதன் ரவிச்சந்திரனின் ஸ்டிங் வலையில் இயக்குனர் மோகன் ஜி சிக்கியுள்ளதாக பகீர் கிளப்பியுள்ளார் மதன் ரவிச்சந்திரன். அகில உலக ஆன்மீக இந்துமத கட்சி தலைவரான ஜெயம் எஸ்கே கோபிக்கும், மதன் ரவிச்சந்திரனுக்கும் இடையே ட்விட்டரில் மோதல் வெடித்தது.
ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் தன்னையும் கோர்த்துவிட்டதாக எஸ்கே கோபி மதன் ரவிச்சந்திரனை அவ்வப்போது திட்டி தீர்த்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மதன் ரவிச்சந்திரன் ‘ மார்ஸ் தமிழ்நாடு’ சேனலின் நிறுவனர் வெண்பா கீதாயன் சார்பில் ஜெயம் எஸ்கே கோபியையும், இயக்குனர் மோகன் ஜி-யையும் எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘
அதில் கூறப்பட்டிருப்பது
; Jayam S K கோபி என்பவர் இத்தனை விஷயங்களை வெளியிடுவேன் என மிரட்டி வருவதாலும் அவரது நண்பர்கள் பல்வேறு வகையில் கொலை மிரட்டல்கள் விடுத்து வருவதாலும் கோபி மற்றும் Voice of savukku மேல் காவல்துறையில் புகார் கொடுக்க உள்ளோம்.
மதன் மேல் இருக்கும் வன்மத்தை வைத்து மதனை மட்டும் corner செய்து வீடியோக்கள் அரைகுறையாக வெளியிட்டால் பிறகு நான் மொத்தமாக
KT ராகவன் விஷயத்தில் நீங்கள் சார்ந்திருக்கும் திரைப்பட இயக்குநர் மோகன் G தமிழக BJP குறித்து கொச்சையாக பேசியது, திரைப்பட நடிகைகள் பற்றி ஆபாசமாக பேசியது, ஒரு மத்திய ணை அமைச்சர் L முருகன் குறித்து கீழ்த்தரமாக பேசியது, காயத்ரி ரகுராம், சௌதாமணி, கேசவ விநாயகம் ஆகியோர் குறித்து மதனிடம் தொலைபேசியில் பேசியது
மற்றும் Channel Vision தஞ்சை ஜீவா தான் செய்கின்ற எருமை பலி யாகம் பற்றி பேசிய ஆதாரங்கள் குறித்து வெளியிடப்படும்.
அத்துடன் Jayam S K கோபி சார்ந்திருக்கும் இயக்குனரான மோகன் Gயும் sting இல் சிக்கியுள்ளார். அவரை Green Park hotelலுக்கு அழைத்து வந்தவர் ஊடகவியலாளர் தேன்மொழி எழில். நீங்கள் மதன் குறித்து எல்லாவற்றையும் வெளியிடுங்கள் கோபி. வெளியிடும் அன்று நான் திரைப்பட இயக்குநர் Mohan G பேசிய Sting வீடியோவை வெளியிடுகிறேன்.
நாங்கள் பொதுவெளிக்கு வந்தால் உங்கள் ஆட்கள் எல்லாரும் இதுபோன்ற இழிவான வேலைகளில் ஈடுபடுவீர்கள் என்பதால் நீங்களும் உங்கள் ஆட்களும் செய்யும் அத்தனை ஊழல்களையும் Sting செய்து வைத்துள்ளோம். நீங்கள் வன்னியர்களையும் தேவர்களையும் நாடர்களையும் குறித்து அவதூறு பேசியதற்கு ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் உங்களுடன் பழகிய மதனிடம் கம்பு சுற்றுவதில் உங்கள் தராதரம் என்னவென்று மக்களும் சினிமா துறை சார்ந்தவர்களும் அறிவார்கள். இவ்வாறு நீங்கள் பழகும் சினிமாக்காரர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் அவர்கள் PAகளையும் பாதுகாப்பு ஆட்களையும் வைத்து வேவு பார்த்து வருகின்றீர்கள் என உங்கள் tweets மூலம் இப்போது அவர்களும் அறிந்து கொள்வார்கள்’ என அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே இயக்குனர் மோகன் ஜி ‘ வாங்க மதன்.. நானும் தயாரா தான் இருக்கேன் திருப்போருர் பற்றி பேச.. நிறைய பேசனும்’ என்று மதன் ரவிச்சந்திரனுக்கு சவால் விட்டுள்ளார்.