The boy, whose mother did not give him a white shirt, complained to the police | வெள்ளை சட்டை தராத தாய் போலீசில் புகார் அளித்த சிறுவன்

ஏலுாரு, ஆந்திர மாநிலத்தில், நண்பனின் பிறந்த நாள் விழாவுக்கு செல்ல, வெள்ளை சட்டை தராததால் அதிருப்தி அடைந்த 11 வயது சிறுவன், போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, வளர்ப்புத் தாய் மீது புகார் அளித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் உள்ள ஏலுாரு என்ற பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன் ராவ், 40. இவருக்கு, 11 வயதில் மகன் உள்ளார்; அரசுப் பள்ளி ஒன்றில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். முதல் மனைவி இறந்து விட்டதால், லட்சுமி என்பவரை, மல்லிகார்ஜுன் ராவ் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

சமீபத்தில், நண்பனின் பிறந்த நாள் விழாவுக்கு செல்ல, வெள்ளை சட்டை தரும்படி, வளர்ப்புத் தாய் லட்சுமியிடம் சிறுவன் கேட்டுள்ளான். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த சிறுவன், துண்டை மட்டும் கட்டிக் கொண்டு, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, நடந்த சம்பவத்தைக் கூறி, லட்சுமி மீது புகார் அளித்தான்.

சிறுவனின் தைரியத்தை பாராட்டிய போலீசார், இது குறித்து லட்சுமியிடம் விசாரித்தனர். அப்போது அவர், சிறுவனை அடிப்பதும், காலில் சூடு வைப்பதும் தெரிய வந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், லட்சுமியை எச்சரித்ததுடன், ‘இனி இது போல் செய்ய மாட்டேன்’ என, எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி அனுப்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.