இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தளபதி விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் அமைதியாக இருப்பார். அதே சமயம் பேசத் துவங்கிவிட்டால் ஜாலியாக பேசுவார், கலாய்ப்பார், ஜோக்கடிப்பார் என அவருடன் வேலை செய்தவர்கள் தெரிவித்தது உண்டு.
“Caravon கூட இல்ல..ரொம்ப கஷ்டம்” இராவண கோட்டம் படக்குழு பேட்டி!
சாந்தமாக இருக்கும் விஜய்ணாவுக்கு கலாய்க்கலாம் வருமா என அவரின் ஜாலி சைடை பார்க்காதவர்கள் வியப்பது உண்டு. இந்நிலையில் தான் லியோ படப்பிடிப்பு தளத்தில் நடந்த விஷயம் அங்கிருந்தவர்களை கவர்ந்துவிட்டது.
விஜய்யை தன் சொந்த அண்ணனாகவே பார்க்கிறார் லோகேஷ் கனகராஜ். அதனால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் விஜய்யிடம் பேசி தீர்வு காண்கிறார். இந்நிலையில் தான் நம்ம அண்ணன் தானே விஜய்னு அவரிடம் உரிமையாக போய் புகார் சொல்ல அவரோ லோகேஷே பயங்கரமாக கலாய்த்துவிட்டார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மாஸ்டர் படத்தில் சாந்தனு நடித்த காட்சிகளை வெகுவாக குறைத்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். அது குறித்து சாந்தனு வருத்தப்பட்டதும் உண்டு. வெறும் 12 நிமிடம் நடித்துவிட்டு தான் அப்படி பேட்டி கொடுத்தீர்களா என ரசிகர்கள் சாந்தனுவை கலாய்த்தார்கள்.
இல்லை 12 நிமிடங்கள் இல்லை 30 நிமிடங்கள் நான் வருவதாக இருந்தது. எனக்கும், விஜய்ணாவுக்கும் காம்பினேஷன் ஃபைட் இருந்தது. எனக்கு ஒரு காதல் பாட்டு இருந்தது. எனக்காக ஒரு தனி யூனிட் கொடுக்கப்பட்டது. ஆனால் படத்தில் அந்த காட்சிகளை எல்லாம் காண்பிக்கவில்லை. அது பற்றி நான் வருத்தப்பட்டது உண்மை தான் என அண்மையில் தெரிவித்தார் சாந்தனு.
இந்நிலையில் சாந்தனுவை தன் வீட்டிற்கு அழைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆனால் தான் நடித்த இராவண கோட்டம் பட வேலையில் பிசியாக இருந்ததால் சாந்தனுவால் லோகேஷ் வீட்டிற்கு செல்ல முடியவில்லை.
Leo: பாட்ஷா படக் கதை தான் விஜய்யின் லியோ கதையா?: உண்மை இதோ
அந்த விஷயத்தை தான் விஜய்யிடம் கூறியிருக்கிறார் லோகேஷ். இந்த சாந்தனுவை வீட்டுக்கு கூப்பிடால் வர மாட்டேங்கிறான் அண்ணா என லோகேஷ் தெரிவித்ததை கேட்டு விஜய் கொடுத்த ரியாக்ஷனை தான் லியோ படக்குழுவால் என்றுமே மறக்க முடியாது.
சாந்தனுவை செட்டுக்கு வரச் சொல்லி தான் அவரை பற்றி விஜய்யிடம் புகார் தெரிவித்திருக்கிறார் லோகேஷ். ஆனால் விஜய்யோ, நீ மாஸ்டரில் அவன வச்சு செய்வ, ஆனால் அவன் உன் வீட்டுக்கு வரணுமா என கவுன்ட்டர் கொடுக்க அங்கிருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள்.
விஜய் அதிகமாக பேச மாட்டார். ஆனால் அவர் பேசினால் அது யார் மனதையும் புண்படுத்தாத வகையில் தான் இருக்கும். மேலும் கலாய்க்கும்போதும் கூட அதிகம் பேசுவது இல்லை. ஷார்ட்டாக கலாய்த்துவிட்டு நான் எதுவுமே செய்யவில்லையே என்பது போன்று அமைதியாக இருந்துவிடுவார்.
விஜய் செமயா கலாய்ப்பார் என்று கேள்விப்பட்டவர்கள் அதை லியோ செட்டில் பார்த்ததும், அட நாம் கேள்விப்பட்டது உண்மை தான்பா என்று கூறியிருக்கிறார்கள்.
Vijay: அன்னையர் தினம் ஸ்பெஷல்: தளபதி விஜய்யின் அம்மாவுக்கு வந்திருக்கும் நியாயமான ஆசை
விஜய் அமைதியாக இருப்பதும் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. அவரிடம் இருக்கும் இன்னொரு குணத்தையும் பார்த்து லியோ படக்குழு பெருமைப்படுகிறது. தன் ஷாட் முடிந்தால் உடனே கேரவனுக்குள் போய் ஏசியை போட்டு அமர மாட்டார் விஜய்.
ஸ்பாட்டில் இருந்து படப்பிடிப்பை பார்த்துக் கொண்டிருப்பார். பெரிய ஸ்டாராக இருந்தும், கேரவன் கொடுக்கப்பட்டும் அதை பயன்படுத்தாமல் அனைவருடனும் சேர்ந்து அமர்ந்திருப்பது தான் படக்குழுவை இம்பிரஸ் செய்துவிட்டது.