உடம்பு வலிக்கு குடிக்கிறாங்க… மது விலையை அரசு குறைக்கணும்… கேபி முனுசாமி வலியுறுத்தல்!

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்பட்ட கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 19 பேர் பலியாயுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் பலியாகியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடின பழனிச்சாமி, இந்த சம்பவத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சாராய ஆறுதான் ஓடுகிறது என்றும் ஆளுங்கட்சியின் அதிகார பலத்தோடு கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கமிஷன் பெறுகிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன், மதுவுக்கு எதிராக அதிமுக போராட்டம் நடத்தினால் அதில் இணைய தயார் என்றும் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக துணை பொதுச்செயலாளரான

அரசு மதுக்கடைகளில் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அரசு மதுக் கடைகளில் குறைந்த விலைக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுதுள்ள கேபி முனுசாமி, உடம்பு வலியை போக்க அதிக பணம் கொடுத்து குடிக்க முடியாததால் கள்ளச்சாராயத்தை குடிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி இருப்பதை கள்ளச்சாராயம் குடிக்க ஊக்கப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்க அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளனர்.

கள்ளச்சாராயம் தொடர்பாக கடந்த 3 நாட்களில் 2,466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2,461 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2,583 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த இரண்டு பேரை கைது செய்துள்ள போலீசார் ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கள்ளச்சாராயத்துக்கு அதிக பேரை பலி கொடுத்த எக்கியார் குப்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.