கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாரான நிலையில், முதல்வர் யார் என்பதில் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது. இதனிடையே கட்சி தலைமையை சந்திக்க சித்தராமையா இடெல்லி சென்றுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் டெல்லி செல்லவிருந்த நிலையில் திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. உடல்நிலை சரியில்லை எனக்கூறி டி.கே.சிவக்குமார் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், “நான் போர்க்கொடியும் தூக்கவில்லை. யாரையும் மிரட்டவுமில்லை. முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி மேலிடத்திடமே விட்டுவிட்டேன்.
காங்கிரஸில் 135 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதில் ஒருவர் கூட தன்னிடம் இல்லை என பேசிய சிவகுமார், முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி மேலிடத்திடமே விட்டுவிட்டேன். சித்தராமையாவுக்கு எனது வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.