கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்குகள் கடந்த 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. இதனை தொடர்ந்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் மேலிடத்திற்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய முதல்வர் யார் என காங்கிரஸ் கட்சி அறிவிக்க உள்ளது. சித்தராமையாவுக்கு பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர்தான் புதிய முதல்வராக அறிவிக்கப்படுவார் கூறப்படுகிறது. ஆனால் ஒக்கலிகர் சங்கம், டி.கே.சிவக்குமாருக்குதான் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதனால் முதல்வர் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுட்டெரிக்கும் வெயில்… பொதுமக்களுக்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வார்னிங்!
இந்நிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பை தொடர்ந்து சித்தராமையான நேற்று டெல்லி சென்றார். அவருடன் சில எம்எல்ஏக்களும் சென்றுள்ளனர். டிகே சிவக்குமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்தார். சித்தராமையாவுக்குதான் முதல்வர் பதவி கிடைக்கும் என கூறப்படுவதால் டிகே சிவகுமார் தனது டெல்லி பயணத்தை ரத்து தவிர்த்ததாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டிகே சிவக்குமார் இன்று டெல்லி புறப்பட்டுள்ளார். டெல்லி செல்லும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிகே சிவக்குமார், முதல்வர் பதவி கேட்டு யாரையும் மிரட்ட மாட்டேன் என்றும் யாருடைய முதுகிலும் குத்த மாட்டேன் என்றும் கூறியுள்ளார். வரலாற்றில் தவறான இடத்தை பிடிக்க விரும்பவில்லை என்றும் மக்களவை தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் தங்களின் அடுத்த சவால் என்றும் கூறியுள்ளார் டிகே சிவக்குமார்.
அடடே… ரயில்வே நிலையங்களில் வரும் சூப்பர் வசதி… என்னன்னு பாருங்க!
மேலும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் தன்னை தனியாக வருமாறு அறிவுறுத்தியுள்ளார் என்றும் அதானல்தான் தான் தனியாக டெல்லி செல்வதாகவும் தெரிவித்தார். மேலும் தனது உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சிதான் தனது கோயில், காங்கிரஸ் கட்சிதான் தங்களின் பெரிய பலம், எனவே யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.