கர்நாடக முதல்வர் யார் LIVE: டிகே சிவக்குமார் டெல்லி பயணம்.. பரபரப்பில் காங்கிரஸ்
India
oi-Nantha Kumar R
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக 224 தொகுதிகளுக்கும் நடந்தது. இங்கு மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தேர்தலில் பதிவான ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை பெற்றது.
பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. ஜேடிஎஸ் 19 தொகுதிகளிலும், மற்றவர்கள் 4 தொகுதகளிலும் மட்டுமே வெற்றி பெற்றனர். இதன்மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைக்கிறது.
காங்கிரஸில் முதல்வர் பதவியை பெற முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் முதல்வர் பதவியை பெற கட்சி மேலிடத்திடம் காய் நகர்த்தி வருகின்றனர். இதனால் அங்குள்ள அரசியல் களம் மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா அரசியலில் நிலவும் தொடர் மாற்றங்களை அறிய இந்த பேஜில் இணைந்திருங்கள்.
Newest FirstOldest First
12:13 PM, 16 May
முதல்வர் பதவிக்கான ரேஸில் நானும் உள்ளேன் என கர்நாடகா மாநில முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் தகவல். டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே முதல்வர் பதவியை பெறுவதில் போட்டி உள்ள நிலையில் பரமேஸ்வர் ரேஸில் உள்ளதாக தெரிவித்துள்ளார். தலித் சமுதாயத்தை சரே்ந்த பரமேஸ்வர் 8 ஆண்டு கர்நாடகா மாநில தலைவராக இருந்தார். இவரது தலைமையின் கீழ் தான் கடந்த 2013ல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
11:29 AM, 16 May
கர்நாடகா சட்டசபை தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த நிலையில் சித்தராமையா தனது ஆதரவாளர்களுடன் முகாமிட்டு முதல்வர் பதவியை பெற காய்நகர்த்தி வரும் நிலையில் டிகே சிவக்குமார் இன்று டெல்லி விரைகிறார். நேற்று அவர் டெல்லி செல்ல முடிவு செய்திருந்த நிலையில் வயிற்று வலி காரணமாக பயணத்தை ரத்து செய்தார்.