கள்ளச்சாராய மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் –  டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுப்படி, கள்ளச்சாராய மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஷச்சாராயம் அருந்தி (13.05.2023 முதல் 15.05.2023) வரை 13 நபர்கள் இறந்துபோன சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலைய குற்ற எண் 225/2023, சட்டப்பிரிவுகள் 120 (b), 328, 304(i) IPC r/w 7, 4(1)(i)4(1)(A)(i) TNP Act 1987-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் 8 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அதோடு செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருவேறு சம்பவங்களில் பெருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் மற்றும் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் விஷச்சாராயம் அருந்தி 13.05.2023 அன்று இறந்துபோன சம்பவம் தொடர்பாக சித்தாமூர் காவல் நிலைய குற்ற எண் 137/2023, சட்டப்பிரிவுகள் 174 Cr.PC@ 4(1A)TNP Act and 284,328,304(ii) IPC மற்றும் குற்ற எண் 138/2023, சட்டப்பிரிவுகள் 174 Cr.PC@ 4(1A)TNP Act and 284,328,304(ii) IPC-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையில் உள்ளன.

15.05.2023 அன்று விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் தமிழக முதல்வர் இந்த வழக்குகள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றம் செய்யப்படும் என அறிவித்தார்.

முதல்வரின் ஆணைக்கிணங்க 16.05.2023 இவ்வழக்கை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CBCID) மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.