கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது . ஆட்சியமைக்கும் அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, அக்கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நேற்று கூடி ஆலோசனை மேற்கொண்டு இறுதி அறிக்கையை கட்சி மேலிடத்திற்கு வழங்கி உள்ளது. அந்த அறிக்கையை கொண்டு கட்சி தலைமை ஆலோசித்து, முடிவு செய்து கர்நாடக முதல்-மந்திரி யாரென்று அறிவிக்க உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமையை சந்திப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான சித்தராமையா டெல்லிக்கு நேற்று மதியம் புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே. சிவக்குமார் கூறும்போது, எனக்கு வயிறு பாதிப்பு உள்ளது. அதனால் டெல்லிக்கு நான் இன்று பயணம் செய்ய முடியாது என கூறியுள்ளார். இதன்பின்னர் அவர், 135 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால், என்னிடம் எந்த எம்.எல்.ஏ.க்களும் இல்லை. முதல்-மந்திரி முடிவை கட்சியின் மேலிடத்திடம் விட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.