அங்காரா,
துருக்கியில் 2003-ம் ஆண்டு முதல் தற்போதைய அதிபர் தாயீப் எர்டோகன் ஆட்சி செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்கு அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகனும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கெமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் அதிபர் எர்டோகன் சுமார் 49.50 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளார். எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட கெமால் கிலிக்டரோக்லு 44.79 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளார்.
துருக்கியை பொறுத்தவரை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற வேண்டும். ஆனால் எவரும் பெறாததால் வருகிற 28-ந் தேதி அதிபர் தேர்தலின் 2-வது சுற்று நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் ஆணைய தலைவர் அஹ்மத் யெனர் தெரிவித்துள்ளார்.