பிலாஸ்பூர் மற்றும் நாக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும்.
கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரமதர் மோடி மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் தொடங்கி வைத்தார். இருப்பினும், அதிக விலைக் கட்டணங்கள் காரணமாக, முதல் நாளிலிருந்தே முன்பதிவு திருப்திகரமாக இல்லை எனவும், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு முன்பதிவு செய்யப்படவில்லை என்றும், அதாவது 50 சதவீத அளவுக்கே முன்பதிவு நடப்பதால், வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
நாக்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கான கட்டணம் ரூ.2,045 ஆகவும், கார் சேர் வகுப்பிற்கான கட்டணம் ரூ.1,075 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இனி வந்தே பாரத் ரயிலுக்கு பதில் தேஜஸ் ரயில் நாக்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையே இயக்கப்படும்.