விஷ சாராய விவகாரம்.. சென்னையில் கெமிக்கல் பேக்டரி உரிமையாளர் கைது..பரபரப்பு தகவல்கள்

விழுப்புரம்: விழுப்புரம் விஷ சாராய சம்பவம் தொடர்பாக சென்னையில் கெமிக்டரி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயல் பகுதியில் கெமிக்கல் பேக்டரி நடத்தி வரும் இளைய நம்பியிடம் இருந்து ஆயிரம் லிட்டர் மெத்தனால் என்ற விஷ சாராயம் வங்கப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயத்தை பலர் வாங்கி குடித்துள்ளனர். இவர்களில் பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனினும் அன்றைய தினம் இரவே எக்கியார்குப்பத்தை சேர்ந்த எஸ்.சங்கர், சுரேஷ், தரணிவேல் ஆகிய 3 பேர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதற்கு அடுத்த நாள் சிகிச்சை பலனின்றி
ராஜமூர்த்தி, மலர்விழி, மரக்காணம் மண்ணாங்கட்டி, எக்கியார்குப்பம் விஜயன் ஆகிய 4 உயிரிழந்தனர்.

திங்கள் கிழமை மரக்காணம் சங்கர், எக்கியார்குப்பம் கேசவவேலு, விஜயன், ஆபிரகாம், சரத்குமார் ஆகிய 5 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். நேற்று எக்கியார்குப்பத்தை சேர்ந்த ராஜவேலு (வயது 46) கிளியனூர் அருகே கோவடியை சேர்ந்த சரவணன் (58) ஆகியோரும் சிகிச்சை பலனிளிக்காமல் உயிரிழந்தனர். இதுவரை மரக்காணத்தில் விஷச்சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 58 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் விஷச்சாராயம் குடித்ததால் செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 34). அவரது மாமியார் வசந்தா (40), பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வெண்ணியப்பன் (65), சந்திரா (55) மாரியப்பன் (60) என அடுத்தடுத்து உயிரிழந்தனர். செங்கல்பட்டு, மரக்காணத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

விஷசாராயம் குடித்து 22 பேர் பலியானது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் உத்தரவின் பேரில் தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கயில் ஈடுபட்டு வருகிறது. அடுத்தடுத்து பலரும் கைது செய்யபப்ட்டு வரும் நிலையில், நேற்று இரவு சென்னையை சேர்ந்த பேக்டரி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-

சென்னை மதுர வாயல் பகுதியை சேர்ந்த இளைய நம்பி என்பவர் அப்பகுதியில் கெமிக்கல் பேக்டரி ஒன்றை நடத்தி வருகிறர். இவரிடம் ஆயிரம் லிட்டர் மெத்தனால் எரிசாராயம் வாங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே தடயவியல் அறிக்கையில் இறந்தவர்கள் குடித்தது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல… ஆலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் என்கிற விஷ சாராயம் என்பது தெரியவந்தது.

இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தமிழக டிஜிபி நேற்று கூறியிருந்தார். அதன்படி போலீசார் நடந்திய தீவிர விசாரணையில் முக்கிய குற்றவாளி எனக் கூறப்படும் இளைய நம்பி என்பவரை மதுரவாயலில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இவர் யார் யருக்கெல்லாம் விற்பனை செய்தார். அந்த விஷ சாராயங்கள் எங்கு இருக்கிறது என்ற விவரம் விசாரணையில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.