நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தென் மாகாணத்தின் காலி, அக்குரஸ்ஸ, கொடபொல, நாகொட, தவலம, கம்புறுப்பிட்டிய மற்றும் அத்துரலிய ஆகிய பிரதேசங்களுக்கு 2023 மே மாதம் 14 ஆம் திகதி முதல் கடற்படை நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளதுடன் தற்போது, நிவாரணக் குழுக்கள் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைய, நேற்று (15) நில்வலா ஆறு பெருக்கெடுத்து ஓடியதால், மாத்தறை மாவட்டத்தில் அதுரலிய பானதுகம பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடற்படை நிவாரணக் குழுக்களால் தேவையான நிவாரண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மேலும், மோசமான வானிலை காரணமாக வெள்ள அபாயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கு கடற்படை கட்டளையின் இருபத்தி ஆறு (26) நிவாரண குழுக்களும், தெற்கு கடற்படை கட்டளையின் நான்கு (04) நிவாரண குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.