Audi கார் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, சிறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்காக ‘டீசல்கேட்’ மோசடியில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
‘டீசல்கேட்’ மோசடி
செவ்வாயன்று ஜேர்மனியில் நடந்த “டீசல்கேட்” மோசடி விசாரணையில் ஆட்டோ நிறுவனமான ஆடியின் (Audi ) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரூபர்ட் ஸ்டாட்லர் (Rupert Stadler), 60 தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதன்மூலம் கார் தொழிலை உலுக்கிய மாசு உமிழ்வு மோசடி ஊழலில் ஒப்புக்கொண்ட மிக உயர்ந்த பதவியில் உள்ள முன்னாள் நிர்வாகி என்ற அவப்பெயருக்கு ஆளானார்.
Sebastian Widmann/Getty Images
குற்றத்தை ஒப்புக்கொண்டார்
மியூனிக்கில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விஅரசனியின்போது, மோசடி பற்றி அறிந்த பிறகும், கையாளும் மென்பொருள் பொருத்தப்பட்ட கார்களை விற்பனை செய்ய அனுமதித்ததாக ரூபர்ட் ஸ்டாட்லர் ஒப்புக்கொண்டார்.
அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததால் சிறைவாசம் செல்வதிலிருந்து தப்பினார். இந்த வழக்கில் அவர் 2020 முதல் விசாரணையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மன் கார் நிறுவனமான Volkswagen-ல், அதன் துணை நிறுவனங்களான Porsche, Audi, Skoda மற்றும் Seat ஆகியவை அடங்கும். இந்த நிறுவனம், செப்டம்பர் 2015-ல் உலகளவில் 11 மில்லியன் டீசல் வாகனங்களில் உமிழ்வு அளவை சரிசெய்ய மென்பொருளை நிறுவியதை ஒப்புக்கொண்ட பிறகு நெருக்கடியில் மூழ்கியது.
topcarnews
ஒப்புதல் வாக்குமூலம்
இந்த வழக்கில் இப்போது வரை, ஸ்டாட்லர் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்து வந்தார்.
ஆனால் அவரது பாதுகாப்பு குழு இந்த மாத தொடக்கத்தில் அவர் இரண்டு ஆண்டுகள் வரை இடைநிறுத்தப்பட்ட தண்டனைக்கு ஈடாக ஒப்புதல் வாக்குமூலத்தை உள்ளடக்கிய ஒரு மனுவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது.
ஸ்டால்டர் 1.1 மில்லியன் யூரோக்கள் ($1.2 மில்லியன்) செலுத்த ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் ஜூன் மாதம் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாட்லர் 2018 இல் கைது செய்யப்பட்டபோது 11 ஆண்டுகள் ஆடியின் தலைமை நிர்வாகியாக இருந்தார். அவர் வோக்ஸ்வாகன் குழுமத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
Audi, Dieselgate fraud