புதுடில்லி: டில்லியில் உள்ள அமிர்தா வித்தியாலயம் என்ற பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பானது. டில்லி புஷ்பவிஹாரில் உள்ள இந்த பள்ளிக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் ஏதுமில்லை. மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement