பீஜிங், சுதந்திரம் என்ற பெயரில் தனியாக பிரிந்து செல்லும் தைவானின் முயற்சியை முறியடிக்க, எங்கள் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து தனி நாடாக பிரிந்து சென்ற தைவானை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
தைவானை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சீனா முயற்சித்து வருகிறது. ஆனால், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
அந்நாட்டுக்கு தேவையான ஆயுதங்கள், போர் பயிற்சிகளை அமெரிக்கா அளிக்கிறது. இது, சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.
தைவான் – அமெரிக்கா உறவு வலுப் பெறுவதை விரும்பாத சீன ராணுவம், தைவான் கடல் மற்றும் வான்வெளியில் போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் தைவான் பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், சீன ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் டான் கெபேய் கூறியதாவது:
அமெரிக்கா – தைவான் இடையே ஏற்பட்டு வரும் நெருக்கம் முற்றிலும் தவறான முடிவாக மட்டும் அல்லாமல், ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளது.
சுதந்திரம் என்ற பெயரில், வெளியாட்களுடன் இணைந்து தனியாக பிரிந்து செல்ல முயற்சிக்கும் தைவானின் நடவடிக்கைகளை முறியடிக்க, சீன ராணுவம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது.
தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை காக்க, எந்த அளவுக்கும் செல்ல சீனா தயாராகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement