இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், ரஜினி மற்றும் கமலின் படங்கள் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவில்லை. விஜய் நடிப்பில் உருவாகும் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படம் முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் இப்படம் அடுத்தாண்டு தான் வெளியாகும் என தெரிகின்றது.
Jailer: ஜெயிலர் படத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..தீயா வேலை செய்யும் தலைவர்..!
இந்நிலையில் இவ்வாறு உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியாகாததால் அடுத்தகட்டத்தில் இருக்கும் நடிகர்களான தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் தீபாவளி ரேஸில் கலந்துகொண்டுள்ளது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
தனுஷ் நடிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக தகவல்கள் வந்துள்ளன. இதைத்தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான் படமும் தீபாவளியை குறிவைத்துள்ளது. மேலும் பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்து வந்த சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கடுமையான போட்டியில் ஜிகர்தண்டா 2 படமும் இணைந்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜெ சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து நடிக்கும் ஜிகர்தண்டா டபுள் x திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, ராகவா லாரன்ஸ் என முன்னணி நடிகர்களின் படங்கள் தீபாவளி ரேஸில் இருக்க தற்போது கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் இந்த ரேஸில் இருந்து விலகுவதாக தெரிகின்றது. கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்டு படங்களை இயக்கும் ராஜு முருகன் ஜப்பான் என்ற படத்தையும் வித்யாசமான கதைக்களத்தை கொண்டு இயக்கியுள்ளார்.
இதையடுத்து இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் இப்படத்தை சோலோவாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். எனவே கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் செப்டம்பர் மாதமே திரையில் வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் இதுவும் நல்ல முடிவு தான் என்கின்றனர்.
ஒரே சமயத்தில் பல படங்கள் வெளியானால் நல்ல படம் கூட வசூலில் பாதிக்கப்படும் அபாயம் இருக்கின்றது. எனவே தீபாவளி போட்டியில் இருந்து விலகி சோலோவாக ஜப்பான் படத்தை வெளியிடுவதும் நல்ல முடிவுதான் என்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.