Karthi: செயின், மோதிரத்தை விற்று உதவி செஞ்சார்.. நடிகர் கார்த்தி உருக்கம்.!

தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த இழப்பு கோலிவுட் வட்டாரத்தினரை கலங்க செய்துள்ளது. மயில்சாமி, மனோபாலா என திறமையான கலைஞர்களை அடுத்தடுத்து இழந்துள்ளதால் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் மறைந்த நடிகர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி தென்னிதிய நடிகர்கள் சங்கம் சார்ப்பில் நேற்று நடத்தப்பட்டது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
நடிகர் சங்கத்தின் சார்பில் மறைந்த திரையுலக பிரபலங்கள் கஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை தி.நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில் நடிகர் கார்த்தி, மன்சூர் அலிகான், பொன்வண்ணன், பூச்சி முருகன் மற்றும் நடிகைகள் தேவயாணி, ரோகினி உள்ளிட் பலர் கலந்து கொண்டனர். மேலும் இயக்குனர் மற்றும் சின்னத்திரை சங்க நிர்வாகிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசியில் பேசிய நடிகர் சங்க பொருளாளரான கார்த்தி, மூன்று பேருமே பேசுறதுக்கு முன்பே மக்களை சிரிக்க வைப்பவர்கள். அந்தளவுக்கு பார்த்த உடனே சந்தோஷப்படுத்திடுவாங்க. கஜேந்திரன் சார் எப்போதும் சந்தோஷமாக இருக்கக்கூடிய ஒரு ஆள். ரொம்ப சப்போர்ட்டா இருப்பார். ரொம்ப பாசிட்டிவா இருக்கக்கூடிய ஒருத்தர்.

அவரைப்பற்றி தெரிஞ்சுக்கணும்னு நினைச்ச போதுதான் கிட்டத்தட்ட 15 படங்கள் இயக்கிருக்கிறார் என்பதும் 100 படங்களுக்கு மேல் நடிச்சுருக்கார் என்பதும் தெரிய வந்தது. அவர் மறைவாருன்னு நினைச்சு கூட பார்க்கலை. அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தது கூட எங்களுக்கு தெரியாது. சிறுத்தை படத்திலிருந்தே மயில்சாமி சார் பழக்கம். தனக்கு மிஞ்சினது தான் தானம்ன்னு இல்லாமல், தானம் போக மிஞ்சினது தன தனக்குன்னு வாழ்ந்த நபர்.

Farhana: ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு: அமீர் பரபரப்பு அறிக்கை.!

கடன் வாங்கி தானம் செய்யும் நபரை பற்றி நான் கேள்விப்பட்டது இல்லை. அப்படி ஒருத்தர் தான் அவர். சென்னை வெள்ளத்தின் போது தன்னிடமிருந்த செயின், மோதிரம் என எல்லாத்தையும் விற்று மக்களுக்காக உணவளித்தார். பலதடவை மற்றவர்களுக்காக என்னிடம் உதவி கேட்டு வந்துருக்கார். அடுத்தவங்களுக்கு உதவி கேட்க தயங்கவே மாட்டார்.குடும்பத்தை விட சமூகத்துக்காக அதிகம் வாழ்ந்துள்ளார். அவர் மறைந்துள்ளதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

மனோபாலா சார் எப்போதும் மற்றவர்களுக்கு பொறுப்பு கொடுக்கணும்னு நினைக்க மாட்டார். அவரே பொறுப்பு எடுத்துக்கிட்டு செய்வார். ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை நடந்தாலும் அன்னைக்கு இரவே போன் பண்ணி ஆறுதல் சொல்வார். வயசு வித்தியாசம் பார்க்காமல் எல்லார் கூடவும் ஈகோ இல்லாம பழகக்கூடிய நபர்.. மூன்று பேரையும் இழந்தது சினிமாத்துறைக்கு பேரிழப்பு. அவர்களை ரொம்ப மிஸ் பண்றோம் என கண்கலங்க பேசியுள்ளார் நடிகர் கார்த்தி.

Abhirami: பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் நடிகை அபிராமி: குவியும் வாழ்த்துக்கள்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.