Maruti Wagon R – 30 லட்சம் வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த மாருதி சுசூகி

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற கார்களில் ஒன்றான மாருதி சுசூகி வேகன் ஆர் விற்பனை எண்ணிக்கை 30 லட்சத்தை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது.  முதல் தறைமுறை வேகன் ஆர் 1999 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து தற்பொழுது வரை தொடர்ந்து பெரும் வரவேற்பினை கொண்டுள்ளது. தற்போது, மூன்றாம் தலைமுறை வேகன்ஆர் மாடல் 2019-ல் அறிமுகப்படுத்தப்ட்டது. இந்த மாடல்  5 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

மாருதி வேகன் ஆர்

1.0-லிட்டர், மூன்று சிலிண்டர் மற்றும் 1.2-லிட்டர் நான்கு சிலிண்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் இரண்டு ஆப்ஷனில் 1.2 லிட்டர் CNG விருப்பத்திலும் வழங்கப்படுகிறது தற்போது, மாருதி சுசூகி வேகன்ஆர் காரின் விலை ரூ.5.55 லட்சத்தில் இருந்து ரூ.7.42 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) வரை உள்ளது.

ருத்து தெரிவித்த மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையின் மூத்த செயல் அதிகாரி ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா, “வேகன் ஆர் 30 லட்சத்துக்கும் அதிகமான மொத்த விற்பனையுடன் தொடர்ந்து நம்பகமான காராக உள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் முதல் 10 கார்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது, மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் பயணிகள் வாகனம் என்ற இடத்தையும் பிடித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.