MK Stalin: தி நகர் ரங்கநாதன் தெருவில் வாக்.. மக்களுடன் கைக்குலுக்கல்.. சிரித்தப்படி செல்பி.. கலக்கிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடை மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆகாய நடை மேம்பாலம்சென்னையின் முக்கிய வர்த்தகப் பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடை மேம்பாலத்தின் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன. தியாகராய நகருக்கு வரும் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் மேட்லி சாலை ஜங்ஷன் வரை ஆகாய மார்க்கமாக நடந்து செல்லும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டது.
இன்று திறப்புஇடையில் கொரோனா பரவல் காரணமாக இடையில் நிறுத்தப்பட்ட இப்பணிகள் கடந்த ஓராண்டாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலத்தில் தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்தது. இந்த நிலையில், இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
​​
நடந்து போன முதல்வர்தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஆகாய நடை மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் பின்னர் இந்த நடை மேம்பாலத்திலேயே நடந்து சென்றார். ஸ்டாலின் மேம்பாலத்தில் நடந்து வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் தங்களி வீட்டின் மாடியில் இருந்தப்படி கைகளை அசைத்து, முதல்வர் வாழ்க என முழக்கமிட்டனர். இதனை பார்த்த முதல்வர் ஸ்டாலின் பதிலுக்கு கையசைத்து வணக்கம் வைத்தார்.
​​
கைக்குலுக்கிய முதல்வர்மாம்பலம் ரயில் நிலையம் அருகில் ரங்கநாதன் தெருவில் இறங்கி நடந்த முதல்வர் ஸ்டாலின், தெருவின் இருபுறமும் குழுமியிருந்த பொதுமக்களிடம் கைக் குலுக்கினார். ரங்கநாதன் தெருவில் முதல்வர் ஸ்டாலின் நடந்து வரும் தகவல் தீயாய் பரவ, அதிகளவில் மக்கள் கூடினர். ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள், ஷாப்பிங் செய்ய வந்த பொதுமக்கள் என அனைவரும் வீதியின் இருபுறமும் திரண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.​​
சிரித்தப்படியே செல்பிமுதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலருடன் சேர்ந்து தானே செல்பி எடுத்த முதல்வர் ஸ்டாலின், சிலரது செல்பிக்கு சிரித்தப்படி போஸ் கொடுத்தார். பெண்கள் பலரிடமும் திமுக ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேட்டும் தெரிந்து கொண்டார். ஆகாய நடைமேம்பாலம், ரங்கநாதன் தெரு என நடந்து வந்த ஸ்டாலின் அனைவரிடமும் கைக்குலுக்கினார். முதல்வர் ஸ்டாலின் தங்களுக்கு கை குலுக்கியதை பேரானந்தமாய் கொண்டாடினர் மக்கள். யாரும் எதிர்பாராத வகையில் ஷாப்பிங் வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கலக்கிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்..
​​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.