புதுடில்லி : இந்திய விமானப்படையின் துணை தளபதியாக, ஏர் மார்ஷல் அசுதோஷ் திக்ஷித் நேற்று பதவியேற்றார்.
போக்குவரத்து மற்றும் பயிற்சி விமானங்களை செலுத்துவதில் 3,300 மணி நேரம் அனுபவம் கொண்ட இவர், சபத் சாகர் உள்ளிட்ட பல்வேறு ராணுவ நடவடிக்கைகளிலும் பங்கேற்றுள்ளார்.
மேலும், மிராஜ் 2000 ரக நவீன போர் விமானபடைப் பிரிவின் தலைமைப் பொறுப்பும் வகித்த அனுபவம் உள்ளவர். விமானப்படை துணை தளபதியாக பதவியேற்பதற்கு முன், தெற்கு விமானப் படைப் பிரிவின் பாதுகாப்புத் தளபதியாகவும், தென்மேற்கு விமானப் படைப் பிரிவின் மூத்த அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement