இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ரஜினி சமீபத்தில் நடித்து முடித்துள்ள ஜெயிலர் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றார்.
பொதுவாக டார்க் காமெடி ஜானரில் படமெடுப்பதில் வல்லவரான நெல்சன் ஜெயிலர் படத்தையும் அதே ஜானரில் தான் எடுத்துள்ளார். என்னதான் டார்க் காமெடி ஜானரில் இப்படம் உருவானாலும் ரஜினியின் ரசிகர்களை முழு திருப்திப்படுத்தும் வகையிலும் இப்படம் இருக்கும் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து கண்டிஷன் போட்ட விஜய்..ஷாக்கான வெங்கட் பிரபு..!
இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் படப்பியடிப்பு முழுவதும் உடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
.மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் நடித்துள்ள இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றது. இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரஜினி இருவரும் ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு முழு திருப்தியுடன் இருப்பதாக தகவல் வந்துள்ளது.
குறிப்பாக ரஜினி இப்படம் தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வரும் என நம்பியுள்ளார். இந்நிலையில் ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடக்காத நிலையில் அந்த குறையை ஜெயிலர் திரைப்படம் போக்கவுள்ளது.
ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஜூலை மாதம் நடைபெற இருகின்றது. படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரையும் அழைத்து படக்குழு கவுரவிக்க இருப்பதாக தெரிகின்றது.
மேலும் பல வருடங்களுக்கு பிறகு ரஜினியின் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதால் இந்த விழாவில் ரஜினியின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். மேலும் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் இப்படத்தின் இயக்குனரான நெல்சனின் பிறந்தநாளான ஜூன் 21 ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. விரைவில் இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.