வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாரும் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி, லண்டன் சென்ற போது, தங்கும் இடமாக மருமகனின் முகவரியை கூறிய போது, அதனை நம்ப குடியேற்றத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி – சுதா மூர்த்தி(72) தம்பதியின் மகள் அக்சதா. இவர் தான் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி.
இந்நிலையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சுதா மூர்த்தி கூறியதாவது: ஒரு முறை, மூத்த சகோதரியுடன் லண்டன் சென்ற போது, எங்கு தங்க போகிறீர்கள் என எழுதி தரும்படி குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனது மகனும் லண்டனில் தான் தங்கி உள்ளார். ஆனால், அவரது முகவரி சரியாக நினைவிற்கு வராததால், ’10 டவுனிங் ஸ்ட்ரீட் ‘ என்ற எனது மருமகன் வசிக்கும் வீட்டு முகவரியை எழுதினேன்.
இதனை பார்த்த, அதிகாரிகள், என்ன நகைச்சுவை செய்கிறீர்களா என கேட்டனர். அதற்கு நான், உண்மையை தான் கூறுகிறேன் எனக்கூறியும், 72 வயதில் எளிமையான முறையில் காணப்பட்ட நான், பிரதமரின் மாமியார் என்பதை எந்த அதிகாரியும் நம்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement