அமெரிக்காவில் வேலைக்குச் சென்ற இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் மாயமான நிலையில், அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தி கிடைத்துள்ளது.
மாயமான இந்திய வம்சாவளியினப் பெண்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வாழ்ந்துவந்த பதிவதா (Lahari Pathivada, 25) என்னும் இந்திய வம்சாவளியினரான இளம்பெண், இம்மாதம் 12ஆம் திகதி வேலைக்குச் சென்ற நிலையில், மாலை அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளார்கள்.
பதிவதாவின் தோழிகள், அவர் கடைசியாக Oklahomaவில் காணப்பட்ட நிலையில், அதற்குப் பின் மாயமானது தெரியவந்ததையடுத்து பொலிசாருக்குத் தகவலளித்துள்ளார்கள்.
கிடைத்துள்ள துயர செய்தி
பொலிசார் பதிவதாவைத் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், ஒரு நாளுக்குப் பின், அதாவது, மே 13ஆம் திகதி, Oklahoma மாகாணத்தில் பதிவதாவின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பதிவதாவைக் காணாமல் கவலையிலிருந்த அவரது குடும்பத்தினருக்கு, அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.