ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி வந்தால் கிராம மக்களை அலைவிடக்கூடாது என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
கோவில் திருவிழாக்களில் கரகாட்டம் மற்றும் ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு சில குறிப்பிட்ட நேரம் மற்றும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த காவல்துறையினரிடம் உரிய அனுமதியும் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு கிராம மக்கள் சார்பாக அனுமதி கோரினால் தாமதிக்காமல் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கான அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்திற்கு கிராம மக்களை அலைய விடக்கூடாது என்றும் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதில் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.