உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த தினேஷ் மகேஸ்வரி மற்றும் எம்.ஆர். ஷா ஆகியோர் சமீபத்தில் ஓய்வு பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய கொலீஜியம், இரு காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்கான பரிந்துரைகளை வழங்க ஒருமனதாக தீர்மானித்தது.
அதன்படி, ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன் ஆகியோரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.