கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் அருகே ஆ வாசுதேவ நல்லூரில் அனுமதி இன்றி விசிகவினர் கொடி கம்பம் நட்டுள்ளனர். அதனை அகற்றுமாறு வட்டாட்சியர் இந்திரா உத்தரவிட்டுள்ளார். அப்போது பெண் வட்டாட்சியரை விசிக மாவட்ட செயலாளர் பகிரங்கமாக மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஆ வாசுதேவ நல்லூரில் அனுமதியின்றி விசிகவினர் கொடிகம்பம் நட்டிருக்கிறார்கள் அதனை அகற்றுமாறு வட்டாட்சியர் இந்திரா உத்தரவிட்டிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த விசிக மாவட்டச் செயலாளர் தனபால், மேஜிஸ்திரேட் என்றால் என்ன, நீ பேசுறதுக்கு ஆள் கிடையாது, வெளியே போ… என்று ஒருமையிலும், எவன் வந்தாலும் கை, கால்களை வெட்டி விடுவேன் , உனக்கு ஏன் மரியாதை கொடுக்கனும், என்று கூறி தகாத வார்த்தைகளாலும் திட்டியிருக்கிறார்.
போலீசார் பக்கத்தில் இருக்கும் போதே பெண் வட்டாட்சியரை விசிக மாவட்டச் செயலாளர் தனபால் பகிரங்கமாக மிரட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை அப்பகுதியினர் வைத்துள்ளனர்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது காவலர்களை இழிவாக விமர்சித்ததாக அந்த மாவட்ட செயலாளர் மீது சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக வீடியோ வெளியான நிலையில், அவரை இடை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அப்போது உத்தரவிட்டார்,.