எவரெஸ்ட் நாயகி.. முத்தமிழ்ச்செல்விக்கு போனில் வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்! சந்திக்க அழைப்பு!

சென்னை : எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்றி பெற முத்தமிழ்ச்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முத்தமிழ்ச்செல்வியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி, உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்யத் திட்டமிட்டுள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கப்போகும் முதல் தமிழ்ப்பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்த நாராயணன் – மூர்த்தியம்மாள் தம்பதியரின் மகள் முத்தமிழ்ச்செல்வி. திருமணத்திற்குப் பிறகு சென்னையில் கணவர் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் முத்தமிழ்ச்செல்வி மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்.

எவரெஸ்ட் சிகரம் ஏற நிதியுதவி செய்யுமாறு, முத்தமிழ்ச்செல்வி தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தார். கடந்த மார்ச் 28-ஆம் தேதி தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ரூ.10 லட்சம் காசோலை வழங்கினார்.

CM Stalin congratulates Muthamizhselvi who climbing mount everest

ஏஷியன் ட்ரெக்கிங் இன்டர்நேஷனல் எனும் தனியார் நிறுவன குழுவினருடன் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி முத்தமிழ்ச்செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வருகிறார். எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் 7200 மீட்டர் உயரத்தைக் கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.

இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தை எட்டும் பயணத்தை மேற்கொண்டு வரும் முத்தமிழ்ச்செல்வியை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முத்தமிழ்ச்செல்விக்கு இன்று பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

CM Stalin congratulates Muthamizhselvi who climbing mount everest

மேலும், எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் மீதமுள்ள தூரத்தையும் வெற்றிகரமாக கடந்து, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றிட வாழ்த்து தெரிவித்ததோடு, எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தை வெற்றிகரமாக முடித்து தன்னை நேரில் சந்திக்க வருமாறும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.