சென்னை கள்ளச்சாராயம் விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ.50000 இழப்பீடு வழங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன செங்கல்பட்டு மாவட்டத்தில் அமாவாசை என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். அமாவாசையும் கள்ளச்சாராயம் குடித்திருந்ததால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்த விவரங்களைப் பகிர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி:, ”செங்கல்பட்டு மாவட்டம் […]