ஈரானில் ஒரு மனிதன் கடந்த 17 ஆண்டுகளாக உணவே சாப்பிடவில்லை என்று கூறி அதிர்ச்சியளிக்கிறார்.
17 ஆண்டுகளாக குளிர்பானம் மட்டுமே
ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், தனக்கு பசியே எடுத்ததில்லை என்றும் கடந்த 17 ஆண்டுகளாக குளிர்பானம் மட்டுமே அருந்தி உயிர் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார்.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் உணவு எடுத்துக்கொள்வதை கைவிட்டதாக கூறி ஆச்சரியமளிக்கிறார். அதுமட்டுமின்றி ஒரு நாளில் நான்கு மணி நேரம் தான் தூங்குவதாகவும் கூறுகிறார்.
Image: Newsflash
பெப்சி மற்றும் செவன் அப் குடித்து வாழ்கிறார்
இந்த நபரின் பெயர் கோலமரேஜா அர்தேஷிரி (Gholamreza Ardeshiri). கடந்த 17 ஆண்டுகளாக தான் ஒரு துளி கூட சாப்பிடவில்லை என்று அர்தேஷிரி கூறுகிறார். அவர் தனது முழு நாளையும் பெப்சி மற்றும் செவன் அப் குடித்து கழிக்கிறார். அவர் உயிருடன் இருப்பது மட்டுமின்றி குளிர் பானங்கள் அருந்தி ஆரோக்கியமாகவும் இருக்கிறார்.
கண்ணாடியிழை பழுதுபார்ப்பவரான அர்தேஷிரி, தனது வயிற்றில் குளிர் பானங்களை மட்டுமே உண்ண முடியும் என்கிறார். அவர் வேறு ஏதாவது சாப்பிட முயற்சித்தால், அவர் உடனடியாக வாந்தி எடுத்துவிடுவாராம்.
Image: Newsflash
சோகமான பின்னணி
தனக்கு இவ்வாறு இருக்கும் காரணத்தை இன்னும் அவர் கண்டுபிடிக்கவில்லையாம். தன் வாய்க்குள் முடி போன்ற ஒரு பொருள் இருப்பதைப் போல ஒரு விசித்திரமான உணர்வு இருப்பதாயும், அந்த முடியின் தலைப்பகுதி வாயிலும், முடிவுப்பகுதி வயிற்றிலும் இருப்பதாகவும் உணர்கிறாராம். என்ன செய்தாலும் அந்த உணர்வை அகற்ற முடியவில்லையாம்.
இதனால், பின்னர் மூச்சுத் திணறுவது போல் உணர்ந்ததாகவும், என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் இறுக்கமாக இருந்ததாகவும், தன்னால் அந்தக் கொடுமையை விவரிக்க முடியாது என்றும் அது பைத்தியம் பிடித்தது போல் இருந்ததாகவும் கூறுகிறார்.
பல மருத்துவர்களை சந்தித்த பிறகும் யாராலும் பிரச்சினையை கண்டறிய முடியவில்லை. அவருடைய குடும்பம் அவர் முன் சாப்பிடுவதில்லை, ஏனெனில் அவர்கள் சாப்பிடுவதைப் பார்க்கும்போது அவருக்கு குமட்டல் ஏற்படுகிறது.
கோலமரேஜா ஒரு இரவில் நான்கு மணி நேரம் தூங்குவதாகவும், ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் சோடா பானங்களை உட்கொள்வதாகவும் கூறினார்.