தமிழ்நாடு முழுவதும் 16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 32 ஐஏஎஸ் அதிகாரிகளும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி,
1) கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளராக ராஷ்மீர் சித்தார்த் ஸகடே
2) சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைமை செயல் அதிகாரியாக கவிதா ராமு
3) தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் சிறப்பு பணி அதிகாரி சிவனருள்
4) மாநில வணிகவரித்துறை இணை ஆணையராக லஷ்மி பவ்யா
5) எல்காட் மேலான் இயக்குனராக அனீஷ் சேகர்
6) மாற்றுத்திறனாளிகள் துறை ஆணையராக ஜெசிந்தா
7) டாஸ்மாக் மேலான் இயக்குனராக விசாகன்
8) நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையராக லலிதா
9) வேளாண்துறை கூடுதல் இயக்குனராக ஸ்ரேயா சிங்
10) உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் செயலாளராக கஜலட்சுமி
11) சர்வ சிஷ்டி அபியான் திட்ட இயக்குனராக ஆர்த்தி
12) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராக சண்முகசுந்தரம்
13) தமிழ்நாடு தேர்தல் ஆணைய செயலாளர் ஆக பாலசுப்பிரமணியம்
14) வணிகவரித்துறை நிர்வாக கூடுதல் ஆணையராக சுப்புலட்சுமி
15) இ சேவை மைய இணை தலைமை செயல் அதிகாரியாக ரமண சரஸ்வதி
16) நீதித்துறை இணைச் செயலாளராக கிருஷ்ணானுன்னி
17) அருங்காட்சியக ஆணையராக சுகந்தி
18) சுகாதாரம் மற்றும் குடும்ப நிலை சிறப்பு செயலாளராக ரீட்டா ஹாரிஸ் தாக்கர்
19) ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக அர்ச்சனா பட்டு நாயக்
20) கைத்தறித்துறை ஆணையராக விவேகானந்தன்
21) வேளாண்துறை ஆணையராக சுப்ரமணியன்
22) மாற்றுத்திறனாளிகள் நல துறை இயக்குனராக வீனித்
23) பதிவுத்துறை ஐஜியாக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
24) கூட்டுறவுத்துறை பதிவாளராக செந்தில் ராஜ்
25) தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குனராக கோவிந்தராவ்
26) நில அளவை பதிவுத்துறை இயக்குனராக மதுசூதன் ரெட்டி
27) தொழில்நுட்ப கல்வி இயக்குனராக விஜய் ஆகியோர் உட்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கியும், தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டிஜிபிகள் நான்கு பேருக்கு டிஜிபிகளாக பதவி உயர்வு அளித்தும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.