யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பு- புறக்கோட்டையில் வேலை செய்துகொண்டிருந்த
நிலையில் காணாமல்போயுள்ளார்.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே காணாமல்போயுள்ளார்.
இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக (2022.10.13) அன்று பலாலி பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடொன்றும் பதிவு செய்தும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என
இளைஞனின் தாயார் சிவகுமார் காந்திமதி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை நாடிய தாயார்
மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் அதற்குரிய சிகிச்சைகளையும்
பெற்றுக்கொண்டிருந்தாக கூறும் தாயார், ஏழு மாதங்களாகத் தேடியும் குறித்த இளைஞனைக்
கண்டுபிடிக்க இயலாத நிலையில் ஊடகங்களை நாடுவதாகக் கூறியுள்ளார்.
குறித்த இளைஞன் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் 077-5988204,
077-5547218 என்கிற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும்
கோரப்பட்டுள்ளது.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |