புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தம்: அறிவித்தார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தம் ஒன்று ஐரோப்பாவுடன் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எல்லை அணிகள் இணைந்து புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் புதிய ஏற்பாடு ஒன்றை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார் ரிஷி.

பிரித்தானிய பிரதமர் ரிஷி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான Ursula von der Leyenஉடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில், அதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தம்: அறிவித்தார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் | Rishi Sunak S New Deal On Immigration Control

Credit: Getty

என்ன ஒப்பந்தம்?

புதிய ஒப்பந்தம் குறித்து பிரதமர் இல்லம் கூறும்போது, புலம்பெயர்தல் தொடர்பில் ஒத்துழைப்பை வலிமையாக்க இரு தரப்பினரும் சம்மதித்துள்ளனர் என்று மட்டும் கூறப்பட்டது. 

ஆனால், அது என்ன ஒப்பந்தம் என்பது குறித்தோ, என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது குறித்தோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தம்: அறிவித்தார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் | Rishi Sunak S New Deal On Immigration Control

இதற்கிடையில், சிறு படகுகள் பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்கும் வரை ஓயப்போவதில்லை என கூறியுள்ள ரிஷி, நாம் பிரான்சுடன் ஒத்துழைப்பை அதிகரித்துள்ளோம், அதைப் பார்க்கும்போது, மற்ற நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறுவதும் சாத்தியம் என்றே தோன்றுகிறது என்றார்.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தம்: அறிவித்தார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் | Rishi Sunak S New Deal On Immigration Control

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.