மிக மோசமான சம்பவம்… நூலிழையில் தப்பிய ஹரி- மேகன் தம்பதி: டயானாவுக்கு நேர்ந்ததும் இதுதான்


அமெரிக்காவில் இளவரசர் ஹரி- மேகன், அவரது தாயார் டோரியா ஆகியோர் மிக மோசமான, பேரழிவை ஏற்படுத்தவிருந்த ஒரு பயங்கர சம்பவத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

துரத்தப்பட்ட இளவரசர் ஹரியின் கார்

நியூயார்க் நகரில் செவ்வாய்க்கிழமை விருது வழங்கும் விழா ஒன்றில் இளவரசர் ஹரி, மேகன் மற்றும் அவரது தாயார் டோரியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவிற்கு பின்னர் தான் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிக மோசமான சம்பவம்... நூலிழையில் தப்பிய ஹரி- மேகன் தம்பதி: டயானாவுக்கு நேர்ந்ததும் இதுதான் | Harry Meghan Catastrophic Car Chase Paparazzi @getty

பாப்பராசி எனப்படும் தனிமுறை நிழற்படக் கலைஞர்களால் இளவரசர் ஹரி தமது குடும்பத்துடன் பயணித்த கார் துரத்தப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மணி நேரம் திரைப்பட பாணியில் இவர்களது வாகனம் ஆபத்தான வேகத்தில் பாய்ந்துள்ளது.

பாதசாரிகள், இரு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சில வாகனங்களுடன் மோதும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொடர்புடைய விருது வழங்கும் விழாவில் மேகனுக்கு Woman of Vision என்ற விருது வழங்கப்பட்டது.

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு பின்னர் ஹரி- மேகன் தம்பதி பொது விழா ஒன்றில் முதன்முறையாக கலந்துகொண்டுள்ளனர்.
விருதை பெற்றுக்கொண்ட மேகன், பெண்கள் தங்கள் சம உரிமைக்காக போராட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார்.

அடையாளம் தெரியாத நபர்களால்

அந்த விழாவில் ஹரி- மேகன் தம்பதி கலந்துகொண்டது பல ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது எனவும், இதனாலையே பாப்பராசி எனப்படும் தனிமுறை நிழற்படக் கலைஞர்களால் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.

மிக மோசமான சம்பவம்... நூலிழையில் தப்பிய ஹரி- மேகன் தம்பதி: டயானாவுக்கு நேர்ந்ததும் இதுதான் | Harry Meghan Catastrophic Car Chase Paparazzi @getty

பாப்பராசிகளால் துரத்தப்பட்ட சம்பவம், மிக மோசமான சூழலை ஏற்படுத்தியிருக்கும் எனவும், சுமார் 6 வாகனங்கள் அடையாளம் தெரியாத நபர்களால் இவர்களை துரத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து விதிகளை பல இடங்களில் மீறியுள்ளதும், பாதசாரிகளுக்கான பாதையிலும் வாகனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹரி- மேகன் குடும்பம் தனிப்பட்ட நண்பர் ஒருவரின் இல்லத்தில் தங்கியிருந்ததாகவும் அவர்களது நண்பரின் வீட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்ய விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் இளவரசி டயானாவுக்கும் பாப்பராசிகளால் இதே நெருக்கடி ஏற்பட்டது எனவும், இறுதியில் அந்த சம்பவம் கொடூரமான விபத்தில் முடிந்தது எனவும் நிபுணர்கள் தரப்பு நினைவுகூர்ந்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.