மின்சார பாவனையாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜயவிக்ரம தெரிவித்தார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் மின்சார பாவனை குறித்தான நடமாடும் சேவையின் விழிப்புணர்வு கூட்டம் நேற்றைய தினம் (16) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது மின் பாவனையாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தை உள்ளடக்கியதாக திட்டமிடப்பட்டுள்ள நடமாடும் சேவையின் மூலம் மின்சார பாவனையில் ஏற்படும் பிரச்சினைகளை முன்வைத்து உடனடித் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
இந்த நடமாடும் சேவையில், மின் கணக்கின் பெயர் மற்றும் முகவரியை மாற்றுதல், மின்சார மெனு, மின் கம்பங்கள் மற்றும் கேபிள் லைன்கள், மின்சார அனுமதி மற்றும் தொடர்புடைய இழப்பீடு, மரக்கிளைகளை வெட்டுதல், புதிய மின் இணைப்புகள், அமைப்பை மாற்றுதல், மின் கட்டணம் மற்றும் மின் தடை போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளை விரைவில் தீர்க்க முடியும் என எதிர்பிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.