சென்னை : ரஜினியை அரசியலுக்கு வரேன் என்று சொல்ல வைத்தார்கள் என ஏவிஎம் ஸ்டியோ பிஆர்ஓ பெரு துளசி பழனிவேல் பேட்டியில் கூறியுள்ளார்.
ரஜினியின் பல படங்களுக்கு பிஆர்ஓவாக இருந்த இவர் ரஜினி குறித்து பல சுவாரசியமான விஷயங்களை நமது பிலிமி பீட் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அரசியல் ஆசை இருந்தது : இதில், ரஜினிகாந்திற்கு பெயர், புகழ், பணம் மாஸ் என அனைத்தும் உள்ளது. அதுவும் இல்லாமல், கலைஞர், எம்ஜி.ஆர், ஜெயலலிதா என அனைவரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் என்பதால், ரஜினிக்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசைவந்தது. இதனால் தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்..
சிரஞ்ஜீவி அறிவுரை : ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று தெரிந்ததும், சிரஞ்சீவி ரஜினியை தொலைபேசியில அழைத்து உன்னைவிட எனக்கு ரசிகர்கள் இருமடங்கு அதிகம் ஆனால், மக்கள் வேற, ரசிகர்கள் வேறு என்பதை அரசியலுக்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். என் கூட ரசிகர்கள், இருந்தார்கள் மக்கள் இல்லை இதனால், இந்த அரசியல் எல்லாம் வேண்டாம் என்று முதலில் ரஜினிகாந்திற்கு சிரஞ்ஜீவி தான் அறிவுரை கூறினார்.
அமைதியை விரும்புபவர் : நான், பல படங்களில் ரஜினிகாந்துடன் பணியாற்றி இருக்கிறேன் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர், யாரிடமும் சண்டையோ, மனஸ்தாபமோ வரக்கூடாது என்று நினைக்கக்கூடிய ரஜினிகாந்திற்கு அரசியல் சரிப்பட்டு வராது. அவரை அனைவரும் சேர்த்து அரசியலுக்கு இழுத்து வந்தார்கள்.
அழுத்தம் கொடுத்தார்கள் : அதே போல தயாரிப்பாளர்கள் படம் வெளியாகும் போது சும்மா இல்லாமல், அரசியல் குறித்து ஏதாவது பேசுங்கள், அரசியலுக்கு வருவேன் என்று சொல்லுங்கள் அப்போதுதான், ரசிகர்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வருவார்கள் என்று அழுத்தம் கொடுப்பார்கள். அதே போல, அவருடைய நெருங்கிய நண்பர்கள் நீங்கள் அரசியலுக்கு வந்தால் வெற்றிதான் என்று அவரை கீ கொடுத்துக்கொண்டே இருந்தனர்.
அரசியல் ஒத்துவராது : இவர்கள் எல்லாம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான், ரஜினிஅரசியலுக்கு வருகிறேன் என்று அறிக்கைவிட்டு, முயற்சி செய்தார். ஆனால், உண்மையில் ரஜினிக்கு நமக்கு அரசியல் ஒத்துவராது என்று நன்றாகத் தெரியும் என்று பெரு துளசி பழனிவேல் பேட்டியில் ரஜினி குறித்து பல விஷயங்களை பேசினார்.