ஹெல்மெட் அணியாமல் பைக் பயணம் : அமிதாப் பச்சன் கிரேட் எஸ்கேப்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் படப்பிடிப்புக்கு சென்றபோது மும்பை போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால் பைக்கில் பயணம் செய்தார். பின்னர் தன்னை அழைத்துச் சென்ற இளைஞருக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவும் வெளியிட்டார். இந்த நிலையில் பைக்கை ஓட்டியவரும், அமிதாப் பச்சனும் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சர்ச்சை எழுந்தது.

இசை சற்றும் எதிர்பார்க்காத அமிதாப் பச்சன் அந்தர் பல்டி அடித்துள்ளார். அது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படம். சும்மா ஜாலிக்குத்தான் அதை பதிவிட்டேன் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: “கன்டென்ட் வறட்சியால் பைக் புகைப்படம் கன்டென்ட் ஆக்கப்பட்டது. உண்மை என்னவென்றால், அது மும்பையின் தெருவில் உள்ள ஒரு லோகேஷன் ஷூட். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மும்பையின் பல்லார்ட் எஸ்டேட்டில் படப்பிடிப்பு நடத்த முறையான அனுமதி பெறப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகையால் அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும் என்பதாலும், டிராபிக் இல்லாமல் இருக்கும் என்பதாலும் அன்று படப்பிடிப்புக்கு அனுமதி பெற்றோம்.

அந்த பைக்கில் அமர்ந்திருந்த போது நான் அணிந்திருந்த உடை படப்பிடிப்புக்கான உடை. படப்பிடிப்பு தளமான அங்கே 30 முதல் 40 மீட்டரில் படக்குழுவைச் சேர்ந்தவருடன் பைக்கில் பயணித்தேன். அதைத் தாண்டி வேறு எங்கேயும் செல்லவில்லை. ஆனால், நான் நேரத்தை மிச்சப்படுத்தவே பைக்கில் சென்றேன் என பரப்பப்பட்டு விட்டது. சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய தேவை இருந்தால் பைக்கில் செல்லவும் தயங்க மாட்டேன். ஹெல்மெட் அணிந்துகொண்டு சாலை விதிகளை முறையாக பின்பற்றி அப்படி செய்வேன். உங்கள் அக்கறைக்கும், அன்புக்கும், என்னை ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி. போக்குவரத்து விதிகளை மீறியதாக தவறான எண்ணத்தை ஏற்படுத்தியதற்காக வருந்துகிறேன். லவ் யூ” என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.