நைஜீரிய சமையல்காரர் ஹில்டா பாசி 100 மணிநேரம் சமைத்து, தற்போதைய சாதனையை முறியடித்து, அதிக நேரம் இடைவிடாது சமைத்து புதிய உலக சாதனை படைத்தார்.
அதன்படி அவர் கடந்த 11-ந்தேதி மாலை 4 மணிக்கு சமைக்க தொடங்கினார். அவர் பெரும்பாலும் நைஜீரிய உணவுகளான ஜோலோப் ரைஸ், அகாரா போன்றவற்றை தயாரித்தார்.வெளிநாட்டு உணவு வகைகளையும் சமைத்தார்.அவர் தொடர்ந்து 100 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைத்தார். ஹில்டா பாசி, 110 உணவு வகைகளை சமைத்தார். இதற்கு முன்பு இந்தியாவை சேர்ந்த பெண் சமையல் நிபுணர் லதா டாண்டன் கடந்த 2019-ம் ஆண்டு தொடர்ந்து 87 மணி நேரம் 45 நிமிடங்கள் சமைத்து இருந்தார். அந்த சாதனையை ஹில்டா பாசி முறியடித்தார்.
இது தொடர்பாக ஹில்டா பாசி கூறும்போது, அன்பின் வெளிப்பாடு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அன்புக்கும், ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றார். ஹில்டா பாசியின் சாதனை சமையல் நிகழ்ச்சி, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதை லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.