பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க எல்லையைநிர்ணயம் செய்வதில் இரு பழங்குடி குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் பலியாகினர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கோஹட் மாவட்டத்தின் தர்ரா ஆதம் கெக் பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இதன் எல்லையை நிர்ணயம் செய்வதில் சன்னி கேல் மற்றும் ஜர்குன் கேல் பழங்குடியின மக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து இரு தரப்பினர் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் பலியாகினர்; பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்த உடல்களை மீட்டதுடன் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement