Comedy troupe fined Rs 17 crore for making fun of Chinese army | சீன ராணுவம் குறித்து கேலி செய்த காமெடி குழுவுக்கு ரூ.17 கோடி அபராதம்

பிஜீங் சீன ராணுவம் குறித்து கேலி செய்ததாகக் கூறி, காமெடி குழுவுக்கு, 17 கோடி ரூபாய் அபராதம் விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

நம் அண்டை நாடான சீனாவின் ஷாங்காய் நகரில், ஷியாகோ என்ற ஊடக குழு செயல்பட்டு வருகிறது.

இது, காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதோடு, இளம் காமெடி கலைஞர்களை ஊக்குவித்தும் வருகிறது.

சமீபத்தில் இக்குழு சார்பில், தலைநகர் பிஜீங்கில் காமெடி நிகழ்ச்சி நடந்தது.

இதில் பங்கேற்று பேசிய கலைஞர் லி ஹாஷி என்பவர், தான் வளர்க்கும் நாய்கள் அணிலைத் துரத்துவதைப் பார்க்கும் போது, அவற்றுக்கு போர்களை வெல்லும் திறன் இருப்பதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதை விமர்சித்த பலரும், லி ஹாஷி சீன ராணுவத்தை மறைமுகமாக கேலி செய்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பான புகாரின்படி வழக்குப் பதிந்து விசாரித்த பிஜீங் கலாசாரம் மற்றும் சுற்றுலா பணியகம், ஷியாகோ குழுவினர் தேசிய உணர்வுகளை புண்படுத்தி விட்டதாகக் கூறி, அதற்கு 17 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது.

இதையடுத்து, பிஜீங், ஷாங்காய் நகரங்களில் திட்டமிடப்பட்டிருந்த அக்குழுவினரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் கால வரையின்றி ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே, தன் செயலுக்கு, லி ஹாஷி வருத்தம் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.