கூடலுார்:’கேரளாவில் தமிழ் மொழி சிறுபான்மையினருக்கு அரசியல் சாசன சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க’ அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் கின்னஸ் மாடசாமி அம்மாநில முதல்வரிடம் வழங்கிய மனுவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் மாடசாமி கூறும் போது: கேரளாவில் தமிழ் மொழி சிறுபான்மை ஆணையம் அமைத்து தமிழ் பகுதியில் உயர்கல்வி பெற தகுதியானவர்களை உள்ளடக்கி சிறப்பு துறை அமைக்க வேண்டும். தேர்தலில் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மனு அனுப்பியிருந்தேன்.
அதன் அடிப்படையில் சட்டசபை தேர்தலில் 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்து,அறிக்கை நாடாளுமன்ற விவகாரத்துறைக்கும் பிற தேவைகள் குறித்து சிவில் சர்வீஸ் சீர்திருத்தத் துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் மொழி சிறுபான்மையினருக்கு அரசியல் சாசன சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என பல்வேறு துறைகளுக்கு கேரள முதல்வர் உத்தரவிட்டுள்ளார், என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement