பெங்களூரு: ஆமதாபாத்தில் இருந்து கிளம்பிய விமானம் நடுவானில் பயணித்து கொண்டு இருந்த போது, புகைத்த பயணி, பெங்களூருவில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து கிளம்பிய ஆகாஷா ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பெங்களூரு நோக்கி நேற்று பயணித்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பயணம் செய்த போது, பயணி ஒருவர் விமானத்திலேயே புகைபிடித்தார்.
இதனை பார்த்த ஊழியர்கள், விமானம் பெங்களூருவில் தரையிறங்கியதும், சிஐஎஸ்எப் வீரர்களின் உதவியோடு அந்த பயணியை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்த விமான நிறுவனம் கூறியுள்ளது.
அவசர கதவை திறக்க முயன்ற பயணி
இதனிடையே, இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஏப்ரல் மாதம் டில்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது பயணி ஒருவர் போதையில் அவசர வழிக் கதவை திறக்க முயன்றார். இதனை கவனித்த ஊழியர்கள், விமான கேப்டன் உதவியுடன் அந்த நபரை தடுத்து நிறுத்தினர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement