Forest Department case against Tamil Nadu devotee who performed puja at Ponnambalamet | பொன்னம்பலமேட்டில் பூஜை செய்த தமிழக பக்தர் மீது வனத்துறை வழக்கு

சபரிமலை:பொன்னம்பலமேட்டில் அனுமதியின்றி பூஜை செய்ததாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பக்தர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்தது.

மகரஜோதி நாளில் பொன்னம்பலமேட்டில் ஜோதி தெரியும். இந்த இடம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஒரு பக்தர் அமர்ந்து பூஜை செய்யும் வீடியோ சில நாட்களுக்கு முன் பரவியது. இதுகுறித்து விசாரிக்க கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

விசாரணையில் பூஜை செய்தவர் திருச்சூரில் வடக்கும்நாதர் கோயில் அருகே வசிக்கும் நாராயணசுவாமி என தெரிந்தது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் சபரிமலையில் சில நாட்கள் கீழ்சாந்தி உதவியாளராக பணிபுரிந்துள்ளார். அவர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

நாராயணசுவாமி கூறியதாவது:

ஐயப்ப சுவாமிக்காக பூஜை செய்தேன். பொன்னம்பலமேட்டுக்கு செல்ல வனக்காவலர்கள் உதவினார்கள். இமயமலைக்கு சென்ற போது அங்கும் பூஜை செய்துள்ளேன். பொன்னம்பலமேட்டில் முதல் முறையாக சென்றேன். பாதுகாக்கப்பட்ட பகுதி என எனக்கு தெரியாது. இதுவரை போலீசோ, வனத்துறை அதிகாரிகளோ என்னை தொடர்பு கொள்ளவில்லை என்றார்.

வனத்துறையினர் பதிந்த வழக்கின் படி நாராயணசுவாமிக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.